Page Loading.. Please Wait
Loading..
இறப்பு செய்திகள்
சிரிப்பு பகுதி
Hi Guest
Total Jokes Posted :30 Page No: 1 of 3
 
வாய் விட்டு சிருச்சா நோய்விட்டுபோகும்
டாக்டர் வாய் விட்டு சிருச்சா நோய்விட்டுபோகுமா?
ஆமாங்க...
பின்ன எப்படி டாக்டர் உங்களால் கார்,பங்களான்னு வாங்க முடிந்தது?
Posted By : hashank ( 9/23/2010 11:32:15 PM (IST) )
 
 
கொஞ்சம் சிரிக்கலாம் வாங்க...!!
அப்பா: உனக்கு ரோஜாப்பூ வாசனை பிடிக்குமா? அல்லது மல்லிகைப்பூ வாசனை பிடிக்குமா?
பெண்: எனக்கு பக்கத்து வீட்டு சீனிவாசனைப் பிடிக்கும்

------------------------------------------------------------
என் அப்பா ஒரு சங்கீத வித்வான்,அம்மாவும் பாடுவாள், அண்ணனுக்கு மிருதங்கம் வாசிக்கத்தெரியும், அண்ணி வீணை வாசிப்பா---

சரி, நீ என்ன பண்றே

வேறென்ன பண்றது, தனிக்குடித்தனம் பண்றேன்!
------------------------------------------------------------------------
நீ காதலிச்சவனையே கல்யாணம் பண்ணிக்க
சம்மதம்ன்னு சொல்லிட்டேனே.. அப்புறம் என்னம்மா யோசிக்கிறே..?


இல்லப்பா.. அதில யாரைக் கல்யாணம்
பண்ணிக்கலாம்ன்னு யோசிக்கிறேன்..!


----------------------------------------------------------------
அவன் டாக்டரிடம் சொன்னான், "டாக்டர், என் மனைவிக்கு சரியாகக் காது கேட்கவில்லை என்று நினைக்கிறேன். என்ன செய்யலாம்?"

டாக்டர், "நான் சொல்வதுபடி செய்துபார். வீட்டுக்குச் சென்றதும் முதலில் 15 அடி தூரத்தில் நின்று கொண்டு ''''இன்று என்ன சமையல்?'''' என்று கேள். அவள் சரியாகப் பதில் சொல்லவில்லையென்றால், இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்தில் சென்று அவளுக்குச் சரியாகக் கேட்கும் வரை கேட்டுப்பார்" என்றார்.

அவன் அப்படியே மாலையில் வீட்டுக்குச் சென்று முதலில் 15 அடி தூரத்திலிருந்து "இன்று என்ன சமையல்?" என்று மனைவியிடம் கேட்டான். பதில் வராமல் போகவே மேலும் மேலும் நெருங்கி வந்து கேட்டான். கடைசியாக அவளது முதுகுக்குப் பின்னால் வந்து நின்று, "இன்று என்ன சமையல்?" என்று கேட்டான்.

அவள் சொன்னாள், "ஏய் கஸ்மாலம், இத்தோட நாலுதடவை சொல்லிட்டேன் ''''மீன் குழம்பு''''ன்னுட்டு".

--------------------------------------
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி
செய்யலாமா..?

ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?

பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு
அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?

------------------------------------

முட்டை போடுற கோழிக்கு ஆம்லெட் போடத் தெரியாது.
ஆம்லெட் போடுற நமக்கு முட்டை போடத் தெரியாது

------------------------------------

தோழி,
புதைனா.
Posted By : Buthaina ( 8/11/2009 9:03:06 PM (IST) )
 
 
வயசானால் அப்படித்தான்!
ஒரு முதியவர் டாக்டரிடம் சென்றார்.

“சொல்லுங்க பெரியவரே, என்ன பண்ணுது உங்களுக்கு?” என்றார் டாக்டர்.

“கண்ணு முன்னால பூச்சி பறக்கற மாதிரி இருக்கு, டாக்டர்!”

“அப்படியா! உங்களுக்கு என்ன, இப்போ 70, 75 வயசு இருக்குமா?
அதான் காரணம்! வயசாவதன் அடையாளம்தான் அது!” என்றார் டாக்டர்.

“என்ன சாப்பிட்டாலும் ஜீரணமே ஆகமாட்டேங்குது டாக்டர்!”

“இது கூட வயசாவதன் அடையாளம்தான்!”

“முதுகு ரொம்ப வலிக்குது!”

“கரெக்ட்! வயசாகுதில்லியா, இந்த மாதிரி பிராப்ளமெல்லாம் வரத்தான் செய்யும்!”

“கை காலெல்லாம் ரொம்பக் குடைச்சலா இருக்கு, டாக்டர்!”

“சிம்பிள்! உங்க வயசுதான் இதுக்கும் காரணம்!”

முதியவர் கடுப்பாகிவிட்டார். “என்ன டாக்டர், எதைச் சொன்னாலும் வயசாகுது,
வயசாகுதுன்னே சொல்லிட்டிருக்கீங்க. உங்களால என்னைக் குணப்படுத்த முடியுமா,
முடியாதா… சொல்லுங்க! நான் வேற டாக்டர் கிட்டேயாவது காண்பிச்சுக்கறேன்!”
என்று சீறினார்.

“சட்டுனு உணர்ச்சிவசப்பட்டு எமோஷனலாயிடறீங்களே,
இது கூட வயசாவதன் அடையாளம்தான் பெரியவரே!” என்றார் டாக்டர் சிரித்துக்கொண்டே.

தோழி,
புதைனா.
Posted By : Buthaina ( 7/31/2009 6:22:48 PM (IST) )
 
 
கல்யாண உடை
சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:

''அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?''

''வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா? அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு''

''அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?''

''??????''

தோழி,
புதைனா.
Posted By : Buthaina ( 7/31/2009 5:45:11 PM (IST) )
 
 
ஒருவன் மற்றவன்
ஒருவன்: இந்த வக்கீல் ஏன் கோர்ட்டுக்கு டார்ச் லைட் எடுத்துகிட்டுப் போறாரு?

மற்றவன்: சட்டம் ஒரு இருட்டறையாச்சே, அதனாலேதான்

*********

ஒருவன்: பீச்லே கடலை விக்கற பையன் ஏன் சோகமா இருக்கான்?

மற்றவன்: இங்கே வர்றவங்க அவங்களே கடலை போட்டுக்கறாங்களேன்னுதான்.

தோழி,
புதைனா.
Posted By : Queen ( 6/30/2009 4:06:56 AM (IST) )
 
 
தமிழ் கடி ஜோக்ஸ்
1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத் தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.

3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால் டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது

4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.

5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.

6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.

7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.

8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?

9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள் நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.

10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.

11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.

12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ் ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.

13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய் தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.

குயின்.
Posted By : Queen ( 5/23/2009 2:24:59 AM (IST) )
 
 
ரெஜிஸ்டர் நம்பர்
மாணவன் : சார்... என்னுடைய எக்ஸாம் ரெஜிஸ்டர் நம்பர் என்ன?
ஆசிரியர் : 148766
மாணவன் : சார்..வேற நல்ல பேன்ஸி நம்பரா குடுங்க சார்.
ஆசிரியர் : ????
Posted By : Queen ( 5/23/2009 1:59:59 AM (IST) )
 
 
காதல் சிரிப்பானது!
காதலி: கல்யாணத்துக்கு முன்னாடி நாம தியேட்டருக்கு வர்றது தப்பில்லையா ராமு?
காதலன்: என்ன பேசற நீ? கல்யாணத்துக்கு அப்பறம் இப்படி வந்து உன் பக்கத்துல உட்கார்ந்தால் உன் புருஷன் உதைக்க மாட்டானா?
*********************************************************
"என் காதலி குற்றால அருவி மாதி¡¢"
"குளு குளுன்னு இருப்பாளா?"
"இல்லை. தலையிலேயே கொட்டுவா"
*********************************************************
ஒருத்தி: 10 வருஷத்துக்கு முன்னே என்னைக் காதலித்துக் கை விட்டவரை இப்பக் கல்யாணம் பண்ணி இருக்கேன்.
மற்றொருத்தி: "என்ன இருந்தாலும் உனக்குப் பழி வாங்குற உணர்ச்சி ஜாஸ்திதான்!"
*********************************************************
"பில்லை நானே கொடுக்கிறேன்னு சொன்ன என் காதலியை நம்பி ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாப் போச்சு."
"ஏன்?"
"பில்லை நான் கொடுக்கிறேன். பணத்தை நீ கொடுத்துடுனு கடைசியில சொல்லிட்டாள்."
**********************************************************

தோழி,
புதைனா.

Posted By : Buthaina ( 5/21/2009 3:00:04 AM (IST) )
 
 
கடி ஜோக்ஸ்
பாமா : பல் ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணும்.
ராமு : சொத்தையோட போகணும்
----------------------------------------------------------
உமா : நான் புதுசா ஒரு பாட்டு எழுதினேன்
பாமா : எதை வைத்து?
உமா : பேனாவை வைத்து தான் எழுதினேன்!
----------------------------------------------------------
விஜய் : கொக்கு ஏன் ஒத்தக்கால்லே நிக்குது?
அஜய் : இன்னொரு காலைத் தூக்கினால் கீழே விழுந்துடுமே அதுதான்.
-----------------------------------------------------------
ரேணு : அவங்க ரெண்டு பேருக்குள்ளே என்ன சண்டை.
பானு : அவங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும்.
ரேணு : அப்ப ஆளுக்கு ஐநூறா பிரிச்சுக்க வேண்டியதுதானே!
-----------------------------------------------------------
கரண் : கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
கிரண் : தெரியலியே?
கரண் : சுவரொட்டி - தான்.
கிரண் : ?????????
-----------------------------------------------------------
"அப்பா...நான் படிக்கப் போகலை,"
"ஏன்டா?"
"கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்னு சார் சொல்றார். அப்புறம் நான் எதுக்குப் படிக்கணும்...?"
"ஆ...!"

தோழி,
புதைனா.

Posted By : Buthaina ( 5/21/2009 2:57:17 AM (IST) )
 
 
சர்தார்ஜியின் ஷாக்ஸ்
சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.

சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.

தோழி,
புதைனா.
Posted By : Buthaina ( 5/21/2009 2:53:17 AM (IST) )
 
    Next Page >>

சமுதாய இயக்கம்


»மேலும் விபரங்களுக்கு

TANZIL.INFO

 
 
 
LBK Footer
வளைகுடா நாட்டில் பணிபுரியும் அன்பர்கள் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான வகுப்புகள் இணையதள மூலம் எளிய வீடியோ முறைமூலம் கற்றுக்கொள்ளவும், மாக் டெஸ்டில் (MOCK DRIVING TEST) வெற்றி பெற சுய பரிசோதனை செய்துக்கொள்ளவும், நமது குழுமம் மூலம் MOCKDRIVING.COM என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். இணையதளத்தை பார்வையிட இங்கே சொடுக்கவும்